ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர மன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடிக் கொண்டிருக்கும் போதே திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகியுள்ளது. உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே நகர மன்ற தலைவர் கூட்டத்தை நிறைவு செய்து நன்றி தெரிவித்தார்.