நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் பேரின் கையெழுத்து வாங்கியது எங்கே? என திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், மக்களின் விரோத திட்டங்களை தான் இந்த அரசு நிறைவேற்றி வருவதாக குற்றம்சாட்டினார்.