திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர்மன்றக் கூட்டத்தில் தேசியகீதம் பாடியபோது கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கூட்டத்தில் பேசிய கவுன்சிலர் ஜன்னத்துல் பிர்தௌஸ், திமுக கவுன்சிலர்களின் எதிர்ப்பால் கண்களில் கருப்புத்துணி கட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.