தவெகவின் கொள்கையை பற்றி கேட்டால் தளபதி தளபதி என கத்துவதாக விமர்சித்துள்ள சீமான், தளபதி என கத்துவது தலைவிதி தலைவிதி என கேட்பதாக கிண்டலாக கூறினார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடைபெற்ற கோனேரிக்கோன் கோட்டை மீட்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுவதாக விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.