எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் வெள்ளை அறிக்கை கேட்பதாக அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் வெள்ள பாதிப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்பதாக கேள்வி எழுப்ப, வெள்ளை பேப்பரில் எழுதி கருப்பு அறிக்கையாக தருகிறேன்படிக்கச் சொல்லுங்கள் என கேலியாக கூறினார்.