சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதில் எந்த தவறும் இல்லை என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எச்.ராஜா, கிரிக்கெட்டை கோயில் வளாகத்தில் விளையாடியதில் தவறு இல்லை என்றும் கருவறையில் விளையாடினால் தான் தவறு எனவும் கூறினார்.