விடிந்தும் விடியாமலும் மனைவியை கண்மூடித்தனமாக அடித்த பெயிண்டர். காது மற்றும் மூக்கில் இருந்து அதிக ரத்தம் வெளியேறி உயிரிழந்த மனைவி. மனைவி உயிரிழந்ததும் வீட்டில் இருந்து எஸ்கேப் ஆன கணவன். கட்டிய மனைவியை கணவன் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? தப்பி ஓடிய கணவன் பிடிபட்டாரா?பெயிண்டர் வேலை பாக்குற நானி, வழக்கம்போல வேலைக்கு போய்ருந்துருக்காரு. மனைவி தேனா மட்டும் வீட்டுல இருந்துருக்காங்க. ஆறு வயசு மகள் அவங்க பாட்டி வீட்டுல இருந்துருக்காங்க. அந்த நேரம் பாத்து, தற்செயலா சொந்தக்காரங்க வீட்டுக்கு வந்திருக்காங்க. வாசல் கதவு தொறந்து தான் இருந்துருக்கு. ஆனாலும் நாம பாட்டுக்க உள்ள போனா நல்லா இருக்காதுங்குறதுக்காக, வாசல்ல நின்னு தேனா தேனான்னு கூப்டு பாத்திருக்காங்க. ஆனா, வீட்டுக்குள்ள இருந்து எந்த சவுண்டுமே இல்லாததால, சந்தேகப்பட்டு உள்ள போய் பாத்துருக்காங்க சொந்தக்காரங்க. அப்ப, வீட்டுக்குள்ள தேனா பேச்சு மூச்சு இல்லாம காது, மூக்குல ரத்தம் வழிந்தபடி மயங்கி கிடந்துருக்காங்க. உடனே அக்கம் பக்கத்துல உள்ளவங்க உதவியோட, தேனாவ ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டு போய்ருக்காங்க. அவங்கள பரிசோதனை பண்ணி பாத்த டாக்டர்கள், தேனா ஏற்கெனவே உயிரிழந்துட்டதா சொல்லியிருக்காங்க.தேனாவுக்கு என்னாச்சு, எப்படி உயிரிழந்தாங்கன்னு சொந்தக்காரங்கலாம் குழம்பி போய்ருக்காங்க. தேனா இறந்தத, கணவர் நானிக்கு சொல்லலாம்னு நினச்சு அவருக்கு ஃபோன் பண்ணி பாத்தா, செல்போன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. அவரு வேலை செய்ற இடத்துக்கு ஆள அனுப்பி விசாரிச்சா, நானி காலையில இருந்தே வேலைக்கு வரலன்னு சொல்லியிருக்காங்க. பிரண்ட்ஸ்கிட்ட விசாரிச்சும் எந்த தகவலும் இல்ல. அப்பதான், தேனாவோட மரணத்துக்கும், கணவன் நானிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்குற விஷயம் சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சிருக்கு. விஷயம் தெரிஞ்சு ஹாஸ்பிட்டலுக்கு வந்த போலீஸும், தேனாவோட கணவன் நானிய தேடிட்டு இருக்காங்க. இதுக்கு இடையில, தேனாவோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டும் வந்துருக்கு. அதுல, தேனாவோட கழுத்த நெரிச்சு சரமாரியா அடிச்சதால தான் அவங்க உயிர் பறிபோய்ருக்குன்னு குறிப்பிடப்பட்டிருந்துச்சு. அப்ப, நானி தான் கண்டிப்பா தேனாவ கொன்னுருக்கான்னு சொந்தக்காரங்க உறுதியா சொல்ல, மனைவிய கணவனே எதுக்கு கொலை செய்யணும்னு போலீஸ் விசாரிச்சப்பதான் எல்லா விஷயமும் தெரியவந்துருக்கு.புதுச்சேரி, ஏனாம்ல உள்ள பல்லா தெருவ சேர்ந்த 30 வயசான நானிக்கும், 26 வயசான தேனாவுக்கும் கல்யாணமாகி, ஏழு வயசுல ஒரு மகள் இருக்காங்க. பெயிண்டர் வேலைக்கு போய் குடும்பத்த கவனிச்சிட்டு வந்துருக்காரு நானி. நல்லபடியா போய்ட்டு இருந்த இவங்க வாழ்க்கையில, செல்போன்னால மிகப்பெரிய பிரச்சினை வந்திருக்கு. தேனா, எப்ப பாத்தாலும் செல்போனும் கையுமாவே இருந்ததா சொல்லப்படுது. புருஷன் பிள்ளைகள கூட சரியா கவனிக்காம, காலையில இருந்து நைட் வரைக்கும் செல்போன்ல பேசிட்டே இருந்துருக்காங்க, இல்லன்னா மெசேஜ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. இது, கணவன் நானிக்கு கோவத்த உண்டாக்கியிருக்கு. நானி பலமுறை சத்தம் போட்டுருக்காரு. ஆனாலும் தேனா அத கண்டுக்காம இருந்துருக்காங்க. அதுல இருந்து மது போதைக்கு அடிமையான நானி, தெனமும் மது குடிச்சிட்டு வந்து மனைவி, மகள, அடிச்சு துன்புறுத்திட்டு இருந்துருக்காரு.அப்பப்ப சின்ன சின்ன சண்டையா ஏற்பட்டுட்டு இருந்தது, ஒருநாள் மிகப்பெரிய பூதாகரமா வெடிச்சிருக்கு.சம்பவத்தன்னைக்கு காலையில நானி வேலைக்கு கிளம்பிட்டு இருந்தப்ப, தேனா, கணவன கவனிக்காம, ஃபோனே கதின்னு இருந்ததா சொல்லப்படுது. செல்போன்ல அப்படி என்னதான் இருக்கு, யாருக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்க, அத என்கிட்ட கொடுன்னு கணவன் கேட்க, அது ஒன்னுமில்லன்னு சொல்லி, தேனா மழுப்பியிருக்காங்க. அப்ப ரெண்டு பேருக்கும் இடையில பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. திடீர்னு ஆவேசமடைஞ்ச நானி, மனைவி கழுத்த நெரிச்சு சரமாரியா அடிச்சதுல, தேனாவுக்கு மூக்கு, காதுல இருந்து ரத்தம் வந்து கொஞ்ச நேரத்துலேயே துடிதுடிச்சு இறந்து போய்ருக்காங்க. தேனா இறந்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் பயத்துலயும் பதற்றத்துலயும் நானி அங்க இருந்து தப்பிச்சு ஓடிப்போய்ட்டான். அடுத்து கொலை வழக்குபதிவு பண்ண போலீஸ், மனைவிய கொலை செஞ்சிட்டு தலைமறைவா இருக்குற நானிய ஸ்பெஷ்ல் டீம் அமைச்சு தீவிரமா தேடிட்டு இருக்காங்க. இதையும் பாருங்க -Nigazhthagavu | "என் WIFE-அ கொன்னுட்டேன்".. PLEASE MARRY ME..! 5 பெண்களுக்கு ஒரே Message FORWARD.!