மலைக்குன்றின்மேல் கேட்ட அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிய நண்பர்கள்.. தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த ஒரு இளைஞர்.. உடன் இருந்த நண்பனே இளைஞரின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த கொடூரம்.. பொங்கல் கொண்டாட்டத்திற்கு மத்தியில் நண்பனை இளைஞர் கொலை செய்தது ஏன்? கொலைக்கான பின்னணி என்ன?மது குடிக்க மலைக்குன்றின்மேல் சென்ற 5 இளைஞர்கள்பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்கு மத்தியில மது குடிக்கிறதுக்காக மலைக்குன்றுக்குமேல போயிருக்காங்க அஞ்சு இளைஞர்கள். அதுல 3 இளைஞர்கள் ரேடியோ செட் கட்டுறதுக்காக கீழே இறங்கிட்டாங்க. அதனால, ரெண்டு இளைஞர்கள் மட்டும் ரொம்பநேரம் மேல இருந்து மது குடிச்சிட்டு இருந்துக்காங்க. இதுக்கு இடையில, மலைக்குன்றுக்குமேல இருந்து ஒரு அலறல் சத்தம் கேட்ருக்குது. அதனால, ரேடியோ செட் கட்டிட்டு இருந்த இளைஞர்கள் 3 பேரும் நம்மகூட குடிச்சிட்டு இருந்த ரெண்டுபேரும்தானே மேல இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஆகிருச்சானு அரக்க பறக்க மலைக்குன்றுக்கு ஓடிருக்காங்க. அங்கபோய் பாத்தா, ஒரு இளைஞர் தலை நசுங்கிப்போய் உயிரிழந்து கிடந்துருக்காரு. உயிரிழந்து கிடந்த இளைஞரோட தலைக்கு பக்கத்துலயே ஒரு பெரிய கல்லு ரத்தக்கறையாகி கிடந்துருக்குது. ஆனா, கூட இருந்து மது குடிச்ச நண்பனை காணோம். அந்த நண்பன்தான் இளைஞரோட தலையில கல்ல தூக்கிப்போட்டு கொலை செஞ்சிட்டு எஸ்கேப் ஆகிட்டானு முடிவு பண்ணின மற்ற இளைஞர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் இளைஞர்கள்கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க. அதுல, சில விஷயங்கள் தெரியவந்துச்சு.மனைவியை பிரிந்து வாழ்ந்த இளைஞர் சக்திவேல்விழுப்புரம், செஞ்சி-திருவண்ணாமலை சாலையில உள்ள வழுக்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் 22 வயசான சக்திவேல். பழங்குடியினரான இவருக்கும் 23 வயசான ஜெயலட்சுமிங்குற இளம்பெண்ணுக்கும் கடந்த சில வருஷங்களுக்கு முன்னால கல்யாணமாகிருக்குது. இந்த தம்பதிக்கு ரெண்டு பெண் பிள்ளைகளும் இருக்காங்க. ஆனா, கணவன்-மனைவிக்குள்ள கடந்த ஆறு மாசமா கருத்து வேறுபாடு இருக்குறதால ரெண்டுபேருமே பிரிஞ்சிதான் வாழ்ந்துட்டு இருக்காங்க. சென்னையில உள்ள ஒரு இளநீர் கடையில வேலை பாத்துட்டு இருந்த சக்திவேல், தீபாவளி, பொங்கல்னு விழாக்களுக்கு மட்டும்தான் ஊருக்கு வந்துருக்காரு. அந்த வகையில பொங்கல் பண்டிகைக்காக கடந்த ரெண்டு நாளைக்கு முன்னால சொந்த ஊருக்கு வந்துருக்காரு சக்திவேல். வந்ததுல இருந்தே மதுபோதையில மிதந்த சக்திவேல், ஊருல உள்ள தன்னோட நண்பர்கள் அஞ்சுபேரை மது குடிக்கிறதுக்காக கூப்ட்ருக்காரு. நண்பன் ட்ரீட் வைக்கிறானு சந்தோஷமா போயிருக்காங்க இளைஞர்கள். மலைக்குன்றில் பதுங்கி இருந்த திருமலையை பிடித்த போலீஸ்ஊரையொட்டி இருக்குற மலைக்குன்றுக்குமேல இருந்து 5 பேரும் மது குடிச்சிருக்காங்க. அப்போ, ரேடியோ செட் கட்டிட்டு மறுபடியும் வர்றதா சொல்லிட்டு 3 இளைஞர்கள் மலைக்குன்றுல இருந்த கீழே போயிருக்காங்க. அடுத்த கொஞ்சநேரத்துலயே மலைக்குன்றுக்குமேல இருந்து அலறல் சத்தம் வந்ததால, கீழே இருந்த நண்பர்கள்போய் பாத்துருக்காங்க. அப்பதான், இளைஞர் சக்திவேல் கொலை செய்யப்பட்டு கிடந்துருக்காரு. கூட இருந்த இளைஞர் திருமலைய காணோம். அடுத்து, வழக்குப்பதிவு பண்ணி தேடுதல்வேட்டையில் ஈடுபட்ட செஞ்சி போலீசார், மலைக்குன்றுக்கு பக்கத்துல பதுங்கி இருந்த திருமலைய மடக்கி பிடிச்சி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், சக்திவேலை கொலை செஞ்சதுக்கான காரணத்தையே சொல்லிருக்காரு திருமலை. மனைவியுடன் சேர்ந்து வாழுமாறு திருமலை அட்வைஸ்சக்திவேலும், அவங்க மனைவியும் பிரிஞ்சி வாழ்றது ஊருக்கே தெரிஞ்ச விஷயந்தான். ஆனாலும், அந்த விஷயத்தை பத்தி யாரு பேசினாலும், அட்வைஸ் பண்ணினாலும் அவங்ககிட்ட கோபப்பட்ருக்காரு சக்திவேல். அப்படிதான், அட்வைஸ் பண்ணின திருமலை கிட்டயும் கோபப்பட்ருக்காரு. அப்போ, ரெண்டு பேருக்குமே வாக்குவாதம் எல்லைமீறிருக்குது. ஒருகட்டத்துல ஆத்திரத்தோட உச்சிக்குப்போன திருமலை, யாரு அட்வைஸ் பண்ணினாலும் கேக்கமாட்டயா? நீ என்ன அவ்ளோ பெரிய ஆளானு கன்னத்துல அடிச்சிருக்காரு. அடுத்து, பக்கத்துல கிடந்த கல்லை சக்திவேலோட தலையில தூக்கிப்போட்டு கொலை செஞ்சிட்டு தப்பி ஓடிருக்காரு. ஆனா, கொலை நடந்த மறுநாளே போலீஸ்கிட்ட சிக்குன திருமலை, இப்போ ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்காரு.இதையும் பாருங்கள் - ஆளுநருக்கு இபிஎஸ் ஆதரவு