மாந்தோப்பில் இருந்து கேட்ட இளைஞரின் அலறல் சத்தம். கத்தியால் குத்திவிட்டு தனது கூட்டாளிகளுடன் தோப்பில் இருந்து ஓடிய கும்பல். குத்துப்பட்டு கிடந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் வெளியான பல உண்மைகள். கணவனை இழந்த பெண்ணால் பிரச்சனை வெடித்தது அம்பலம். கணவனை இழந்த பெண்ணுக்கும் குத்துப்பட்ட இளைஞருக்குமிடையே என்ன பிரச்சனை? பாமக பிரமுகர் சம்மந்தப்பட்டது ஏன்? நடந்தது என்ன?மாந்தோப்புல இருந்து ஒரு இளைஞரோட அலறல் சத்தம் கேட்ருக்குது. பக்கத்து தோப்புகள்ல இருந்த சிலர், சத்தம் கேட்டு ஓடி வந்துருக்காங்க. அப்போ, ஒரு மர்ம கும்பல் தோப்புக்குள்ள இருந்து தலைதெறிக்க ஓடிருக்காங்க. இளைஞர் ராஜதுரை கையில கத்தியால குத்துப்பட்டு வேதனையில துடிச்சிருக்காரு. அதனால அந்த கும்பல பிடிக்கிறதுல தீவிரம் காட்டாம, இளைஞரை மத்தூர் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிருக்காங்க மக்கள். அங்க டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததால் கிருஷ்ணகிரி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருது. தோப்புக்குள்ள வச்சி கத்தியால குத்துன கும்பல் யாரு? எதுக்காக அவங்க கத்தியால குத்துனாங்கனு இளைஞர் ராஜதுரைகிட்டயே விசாரிச்சிருக்காங்க மத்தூர் போலீசார். அப்ப தான் பல உண்மைகள் வெளிய வந்துச்சு.போயர் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் தான் ராஜதுரை. டிப்பர் லாரி டிரைவரான இவரு, ஒரு கல்குவாரியில வேலை பாத்துட்டு இருக்காரு. அந்த கல்குவாரிக்கு மூக்கா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூலி வேலைக்கு வந்துருக்காங்க. அந்த பொண்ணோட கணவர், உடல்நிலை சரியில்லாம உயிரிழந்ததால கூலி வேலை செஞ்சிதான் தன்னோட 3 மகன்களயும் வளத்துருக்காங்க.இதுக்கு மத்தியில அந்த பொண்ணுக்கிட்ட ராஜதுரை அக்கறையா பேசி நட்பா பழகிருக்காரு. அந்த நட்பு நாளடைவுல தகாத உறவுக்கு தூபம் போட்ருக்கு. ரெண்டு பேரும் அடிக்கடி தனிமையில இருக்குறது, வெளிய சுத்துறதுனு இருந்துருக்காங்க. அதனால ரெண்டுபேருக்கும் இடையில இன்னும் நெருக்கம் அதிகமாகிருக்குது. சம்பாதிக்கிற பணத்துல சேமிச்சி ஒரு லட்சம் ரூபாயை அந்த பொண்ணுக்கு குடுத்துருக்காரு ராஜதுரை. பணத்தை வாங்கின சிலநாள்லயே ராஜதுரைகிட்ட பேசுறதயே நிறுத்திட்டாங்க அந்த பொண்ணு.ஏன் பேசமாட்டேங்குற? என்னாச்சுனு அந்த பொண்ணுக்கிட்ட ராஜதுரை கேட்டப்ப என் மகன்கள் வளந்துட்டாங்க, இனிமேல் தகாத வேலையெல்லாம் செஞ்சா அவங்களுக்கு அவமானம், அதனால ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு சொல்லிருக்காங்க..நீ பேசலனா என்னால வாழ முடியாது, தயவுசெஞ்சி பேசுனு கெஞ்சி பாத்துருக்காரு ராஜதுரை. ஆனாலும் தான் எடுத்த முடிவுல உறுதியா இருந்த அந்த பொண்ணு பின்வாங்கவே இல்ல. அதனால கடுப்பான ராஜதுரை, நானே வேண்டாம் நான் கொடுத்த பணம் மட்டும் வேணுமா திருப்பி குடுத்துருனு கேட்ருக்காரு. அதனால கடந்த வருஷம் பொங்கல் சமயத்துல தன்னோட உறவினர்களை சாட்சிக்கு வச்சி ராஜதுரைகிட்ட 50 ஆயிரத்த குடுத்த அந்த பொண்ணு மீதிப்பணத்த சீக்கிரமே தர்றதாகவும் சொல்லிருக்காங்க.ஆனா, மீதி பணத்த குடுக்காத அந்த பொண்ணு சென்னைக்கு வேலைக்கு போயிட்டாங்க. அதுக்குப்பிறகு அந்த பொண்ணுக்கு தினமும் போன் பண்ணிருக்காரு ராஜதுரை. அந்த போனுக்கு ரெஸ்பான்ஸ் பண்ணாத அந்த பொண்ணு ஒருகட்டத்துல செல்போன் நம்பர ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டாங்க.அதனால கோவமான ராஜதுரை எப்டி பேசுறது? பணத்த எப்படி கேக்குறதுனு தெரியாம யோசிச்சதோட சென்னைக்கு வந்து பல இடங்களல தேடயும் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா அந்த, தேடல் தோல்வியிலதான் முடிஞ்சது. இதுக்கு மத்தியில, தன்னோட கிராமத்துக்கு வந்துருக்காங்க அந்த பொண்ணு. அத தெரிஞ்சிக்கிட்ட ராஜதுரை, அந்த பொண்ணோட வீட்டுக்கு நேர்ல வந்து சண்டை போட்டதோட நீ உன்னோட பசங்களுக்காக என்கிட்ட பேசாம இல்ல, வேற யார் கூடயோ தகாத உறவுல இருக்குறதா சொல்லி, செல்போனை பறிச்சி கால் ஹிஸ்ட்ரிய செக் பண்ணிருக்காரு.அத பாத்த அந்த பொண்ணோட மூத்த மகன், தன்னோட அம்மாக்கிட்ட விசாரிச்சிருக்காங்க. நடந்த விவரத்த தன் மகன்கிட்ட சொல்லிருக்காங்க அந்த பொண்ணு. அடுத்து, தன்னோட கிராமத்துல உள்ள பாமக பிரமுகரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான பாவேந்தன போய் நேர்ல பாத்த அந்த பொண்ணோட மூத்த மகன், ராஜதுரைய மிரட்டி வைங்க, அப்படி மிரட்டியும் பணியலனா லேசா நாலு தட்டு தட்டி வைங்க, இனி எங்க அம்மாவோட பாதையில அவன் வரக்கூடாதுனு சொல்லிருக்காரு. ஏற்கெனவே ரவுடியா இருக்குற பாவேந்தனுக்கு இந்த மாதிரி கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல் எல்லாமே புதுசு இல்ல. அதனால, ராஜதுரைக்கு போன் பண்ணி கொஞ்சம் பேசணும் உங்களுக்கு சேர வேண்டிய மீதி பணத்தையும் குடுக்கணும்னு சொல்லி மாந்தோப்புக்கு வர சொல்லிருக்காரு.அந்த பொண்ணு நமக்கு தர வேண்டிய பணத்த குடுக்குறதுக்கு தான் உறவினர்கள வச்சி பேச சொல்லிருக்காங்கனு நெனச்ச ராஜதுரையும் மாந்தோப்புக்கு வந்துருக்காரு. என்ன தைரியம் இருந்தா, அந்த பொண்ணு வீட்டுக்கேபோய் மிரட்டுவ? இனி மிரட்டுற வேலை வச்சிக்கிட்ட ஆள காலி பண்ணிருவோம்னு பாவேந்தன் தன்கூட சில இளைஞர்களை சப்போட்டுக்கு வச்சிக்கிட்டு, ராஜதுரையை மிரட்டிருக்காரு. அதுக்கு, எனக்கு தர வேண்டிய பணத்த குடுத்துட்டா, நான் ஒதுங்கிக்கிறேனு சொன்னதும் கடுப்பான பாவேந்தன், ராஜதுரைய கத்தியால குத்திருக்காரு.அப்போ, ராஜதுரை தடுத்ததால கத்திக்குத்து வயித்துல விழாம கையில விழுந்துருக்குது. சட்டை, பனியன் எல்லாமே ரத்தத்தால நனைஞ்சி வலியால கத்திருக்காரு ராஜதுரை. அப்பதான் பக்கத்து தோப்புல நின்னுட்டு இருந்த சிலர் ஓடி வந்து ராஜதுரையை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. அதுக்குப்பிறகு தேடுதல் வேட்டையில ஈடுபட்ட போலீசார், ராஜதுரைகிட்ட பணம் வாங்கின பொண்ணு, பாவேந்தன், அர்ஜூன், கேசவன், தினேஷ் ஆகிய அஞ்சு பேரை பக்கத்து கிராமத்துல கைது பண்ணிட்டாங்க.இதையும் பாருங்கள் - Nigazhthagavu | "என்ன விட்ருங்க PLEASE" இருட்டில் கதறிய 14 வயது சிறுமி | Kolkata Girl Harassment