திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்குகளில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்த நிலையில் மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பாக மீண்டும் விசாரணை நடைபெற்றது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிடுவதற்கு,கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா? என்றும் வினவினார்.