மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் திமுக எம்.பிக்கள் செய்தது என்ன? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற அதிமுகவின் 53 ஆவது தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காவிரி பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தையே முடக்கும் அளவுக்கு அதிமுக எம்.பிக்களுக்கு தில்லும், திரானியும் இருந்ததாக கூறினார்.