நல்லது நடந்தால் அதை தடுக்கும் வேலையில் பாஜகவினர் ஈடுபடுகிறார்கள் என சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு பொது மக்களுக்கு காலை உணவு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேகர் பாபுவிடம் மேற்கு மாம்பலம் கிருஷ்ணர் கோயில் இடிப்பு விவகாரம் குறித்த கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், கோயிலை இடித்து விட்டு கட்டுவதற்கான அனைத்து சான்றிதழ்களும் இருக்கிறது எனவும் சட்டத்துக்கு உட்பட்டு தான் திருப்பணிகள் நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.