WEEKEND MASS செக் அப் என்ற பெயரில் காவல்துறை அதிரடி சோதனை...மதுரை மாநகர் பகுதிகளான விளாங்குடி, வள்ளுவர் காலனி, மீனாட்சி நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில வாரங்களாக வாகனங்கள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க மாநகரம் முழுதும் WEEKEND MASS செக் அப் என்ற பெயரில் தூப்பாக்கி ஏந்திய 30 காவல்துறை குழுவினர் 56 இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் அதிக அளவு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வரும் பகுதிகளிலும் கண்காணிப்புக்கு உட்பட்ட இடங்களிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இந்த MASS செக் அப் மூலம் வாகனங்களில் ஆவணங்கள் குறித்தும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதான நடவடிக்கைகள் போன்ற போக்குவரத்து விதிமீறல்களும் கண்காணிக்கப்படுகிறது.