வாரவிடுமுறை, ஓணம் பண்டிகை, மிலாடி நபி என தொடர் விடுமுறையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். திரிவேணி சங்கமம், சன்ரைஸ் பாயிண்ட், பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், சூரியன் உதயத்தை கண்டு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குடும்பத்தினர் நண்பர்களுடன் சங்கிலி படித்துறை பகுதியில் கடலில் குளித்தும் அலைகளோடு விளையாடியும் உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.