நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கோவில் திருவிழாவில் ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வட்டூர் கம்பத்து வீரன் கோவிலில், மேளதாளம் முழங்க பூசாரிகள் அரிவாள்களை எடுத்துக்கொண்டு கோவிலில் இருந்து ஊர்வலமாக படுகளம் திடலுக்கு வந்து பெரிய திடலில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வெட்டி பலியிட்டனர். பின்னர், ஆடுகளின் ரத்தத்தை சோற்றில் பிசைந்து மயானக் காட்டில் வீசி விட்டு வந்து, பெருமாள் சுவாமியின் திரையை விலக்கி பூஜைகள் செய்தனர்.