சென்னையில், மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை மற்றும் ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. கொட்டும் மழையிலும் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆடல், பாடலுடன் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரளானோர் மாலில் கூடியிருந்தனர். மால் வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டு, பாடகர்கள் பாடல் பாட, இளைஞர்களும், இளம்பெண்களும் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.பணத்தை விட உடல் முக்கியம் என்பதால், இந்த புத்தாண்டில் உடல் நலத்தில் அக்கறை காட்டப்போவதாக கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஆசியா என்கிற இளம்பெண் தெரிவித்தார்.சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம் கரைபுரண்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஆயிரக்கணக்கானோர் கடற்கரையில் திரண்டிருந்தனர். இளைஞர்களும், இளம்பெண்களும் மழையில் நனைந்தபடியே குத்தாட்டம் போட்டு 2026 புத்தாண்டை வரவேற்றனர்.புத்தாண்டை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை மின்னொளியில் ஜொலித்தது. மணிக்கூண்டு அருகே கொட்டும் மழையிலும் பொதுமக்கள் உற்சாகத்தோடு புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு பிறந்ததும் ’ஹேப்பி நியூ இயர்’ என முழக்கமிட்டு, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைக் கூறினர்.