நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்திற்கு நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர். திம்மராஜபுரத்தில் ஜெயபார்வதி என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம், வெங்கடாசலபதி கோவில் நிலத்தில் கட்டப்பட்டதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது. இதனையடுத்து திருமண மண்டபத்தை காலி செய்ய கடந்த மாதம் 25 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுவரை காலி செய்யாததால், சீல் வைக்க அதிகாரிகள் வந்தபோது, பொதுமக்கள் அவர்கள் மீது மண்ணெண்ணையை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.