ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி தஞ்சை பெரியக் கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராஹி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் மஹிஷாசூரவர்த்தினி அலங்காரத்திலும், வராஹி அம்மன் சரஸ்வதி அலங்காரத்திலும் அருள்பாலித்தனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த தெய்வங்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நந்தி மண்டபத்தில் நடைபெற்ற பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகளையும், தெற்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியையும் ஏராளமானோர் கண்டுகளித்தனர்.