புதுக்கோட்டை மாவட்டம் திருவானைக்காவல்பட்டியில் பாழடைந்த அங்கன்வாடி கட்டடத்திற்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என பெற்றோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 15 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடம் பாழடைந்ததால் அருகேவுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. அங்கு லேப் வரவுள்ளதால் பள்ளிக்கல்வித்துறை அங்கன்வாடியை காலி செய்தது. இந்நிலையில் மீண்டும் இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டடத்திற்கே குழந்தைகளை அனுப்ப பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.