தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டோம் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற உறுதி மொழி ஏற்கப்பட்டது. முதல்வர் உறுதிமொழியை கூற திமுக நிர்வாகிகள் பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றனர். அப்போது கூறியதாவது:தமிழ்நாட்டில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தையும் சேர்த்து, தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாச்சாரத்தை குறைக்கும் தொகுதி மறுவரையறைக்கு எதிராக போராடுவேன். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழக வாக்காளர்களின் உரிமையை பறிக்கும் SIR-க்கு எதிராக நிற்பேன்.இளைஞர்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்து நிற்பேன், மாணவர்களின் உரிய கல்வி நிதிக்காக போராடுவேன். தமிழ் மொழி, பண்பாட்டு பெருமைக்கு எதிரான பாகுபாட்டை எதிர்த்து போராடுவேன்.பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை காக்க, நிதிக்காக போராடுவேன். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம். இவ்வாறு திமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து, வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள, அண்ணா சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வணங்கினார். சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.இதையும் பாருங்கள்: PerarignarAnnaBirthday மேடையில் முதல்வர் சொல்ல சொல்ல உறுதிமொழி ஏற்ற திமுகவினர் | CMStalin | Dmk