தவெக தலைவர் விஜய் வேண்டுமென்றால் பண்ணையாராக இருக்கலாம், பண்ணையார் பாணி எல்லாம் எங்கள் கிட்ட இல்லை என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டடத்திற்கான கட்டுமான பணியை தொடங்கி வைத்தவரிடம், ஆட்சிக்கு வந்தபிறகு, திமுக அமைச்சர்கள் அனைவரும் பண்ணையாளராக மாறி விடுவதாக தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தாங்கள் பண்ணையார் அல்ல என்று அமைச்சர் பதிலளித்தார். நேரத்தை சுட்டிக்காட்டி, தற்போது மூன்றரை மணி ஆகிறது, இன்னும் சாப்பிடல மக்கள் பணியை பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.