நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக சரணாலய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், வன விலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனப் பகுதிகளில் 20 இடங்களில் அமைக்கபட்டுள்ள நீர் தொட்டிகளில், நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மாயார் ஆற்றை தவிர மற்ற ஆறுகளில் நீர் வற்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.