தருமபுரி அருகே மல்லிகுட்டை ஊராட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் 1 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.