கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருப்பயர் கிராமத்தில் சாலை பணிக்காக குடிநீர் கிணற்றில் இருந்து தண்ணீர் திருடுவதாக கூறி தடுத்து நிறுத்திய இளைஞர்கள், ஊராட்சி செயலர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள கிணற்றில் இருந்து ஊராட்சி செயலாளர், மறைமுகமாக தண்ணீர் எடுத்து ஒப்பந்ததாரருக்கு விற்பதாக இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் அளித்தாலும், அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக கூறிய இளைஞர்கள், தண்ணீர் திருட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறினர்.