சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, செவரகோட்டை தடுப்பணையில் கிராமத்தினர் குளித்து மகிழ்ந்தனர். விவசாய தேவைக்காக தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், ஷட்டரில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீரில் கிராம மக்கள் ஜாலியாக குளித்தும், மீன் பிடித்தும் பொழுது போக்கினர்.