நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கான தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து விட்டார். இம்மாவட்டத்தில் உள்ள காரையார், சேர்வலார் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, காரையார் அணையில் இருந்து, 800 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன்மூலம், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 46 ஆயிரத்து 786 ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைய உள்ளது.