கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் திருநாரையூர், கொளக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.