வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை,மாவட்டங்களுக்கு ஒரு போக பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனக்கால்வாயை ததும்பியபடி செல்வதால் பொதுமக்கள் கால்வாயில் இறங்க முயற்சிக்க வேண்டாம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களுக்கு தற்போது ஒரு போக பாசனத்திற்காக அணையிலிருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், மழையின்றி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதும் குறிப்பிடதக்கது.