கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டது. ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளான முத்தாலி, தொரப்பள்ளி, பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி, அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் 8 ஆயிரம் ஏக்கர்கள் நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே 2 ஆம் போக பாசத்திற்காக கெலவரப்பள்ளி அணையிலிருந்து 90 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் மே மாதம் வரை 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.