தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 8 ஆயிரத்து 127 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரி, டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதில் காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரத்து 402 கன அடியும், வெண்ணாற்றில் 3 ஆயிரத்து 907 கன அடியும், கல்லணை கால்வாயில் ஆயிரத்து 11 கன அடியும், கொள்ளிடத்தில் 807 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.இதையும் படியுங்கள் : ஜூன் 27 காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்..