பில்லூர் அணையின் நீர் மட்டம் 97 அடியாக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சி, அப்பர் பவானி,குந்தா உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில் உள்ள பில்லூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி 15 ஆயிரம் கன அடி நீர் பவானியாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பவானியாற்றின் கரையோர பகுதிகளான தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, சிறுமுகை , லிங்காபுரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : தொடர் மழையால் ஆழியார் கவியருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... ஆழியார் கவியருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை