கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரத்தில் உள்ள 27 கிராம மக்களுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும், அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறினார்.