தென்காசி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கரையோரம், தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.