பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி ஊராட்சியில், கழிவு நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளதால், நடவடிக்கை எடுக்க கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளில், கழிவுநீரகற்று வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்புகளில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பலமுறை முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை என்றும், டெங்கு காய்ச்சல் பரவி வருவதாகவும் கிராம மக்கள் குற்றம்சாட்டினர். அப்போது, அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.