திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூரில் இயங்கி வரும் கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு செய்ய வந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை ஆய்வுக்கு எடுத்து செல்லவில்லை என குற்றம்சாட்டினர்.