சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே புளியால் கிராமத்தில் உள்ள ஊரணி கரையோரம் கழிவுகளை கொட்டுவதால், ஊரணி தண்ணீரை பயன்படுத்த முடியாமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழனியப்பா செட்டியார் ஊரணி கரையில் காணப்படும் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.