நாகப்பட்டினம் மாவட்டம் பனங்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு கிராம மக்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 620 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்ட நிலையில், நில உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.