தொடர் விடுமுறையை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். ஓணம் பண்டிகை மற்றும் வார விடுமுறையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாத சுவாமியை தரிசனம் செய்தனர். சுற்றுப்பயணிகளின் வருகையால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.