கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் குரங்குகள் தொல்லை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.