புதுச்சேரியிலும் வாக்குத் திருட்டு நடைபெறுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம், எம்எல்ஏ வைத்தியநாதன் வீட்டிற்கு அருகில் இருக்கக் கூடிய ஆதரவாளர்கள் வீட்டிலேயே வாக்குத் திருட்டு நடைபெறுவதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றம்சாட்டினார்.