கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 10 மாணவ, மாணவிகள் வாந்தி எடுத்ததால் கோவக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மதிய உணவிற்காக அருகில் உள்ள வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அதிகாரிகள் ஆய்விற்கு வருவதாக கூறி, அனைவரையும் கட்டாயப்படுத்தி மதிய உணவு சாப்பிட வைத்ததாக கூறப்படுகிறது. இதையும் படியுங்கள் : ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்.. முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என குற்றச்சாட்டு