அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பறந்த நிலையில், சிரித்த படியே "பிள்ளையார்சுழி போட்டாங்க" என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சூசகமாக பேசியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுகவினர் மத்தியில் பேசிய அவர், தொண்டர்களை பார்த்து அங்க பாருங்க கொடி பறக்குது எனக் கூறினார். மேலும் எழுச்சி ஆரவாரம் என குறிப்பிட்டு தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி தான் வலுவான கூட்டணி என்றும் தெரிவித்தார்.