தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஏ.சி. சொகுசு பேருந்துகளில் அம்பத்தூரில் இருந்து விக்கிரவாண்டிக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 100 பேருந்துகளில் மாநாட்டிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக இரண்டு சொகுசு பேருந்துகளில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அந்த பேருந்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.