தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற த.வெ.க. தொண்டர்கள் மீது தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதுவது போல் வந்து நின்றதால் ஆத்திரமடைந்த த.வெ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.