நாடாளுமன்ற மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்து தொகுதி குறைக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறைந்து குரல்வளை நெறிக்கப்படும் என அமைச்சர் எ.வ வேலு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட்டால் தமிழகத்தில் 8 தொகுதிகள் வரை குறையும் என தெரிவித்துள்ளார்.