தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழநி அன்ஃபிட் என பாஜக கவுன்சிலர் குற்றம் சாட்டியதால், தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் பாஜக- காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தென்காசி தொகுதிக்கு எந்த திட்டத்தையும் பெற்றுத்தரவில்லை என பாஜக கவுன்சிலர் சங்கர் கூறியதால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் கவுன்சிலர் ரஃபிக் மேஜையை தட்டி, துண்டை வீசி, துள்ளிக்குதித்து ஆக்ரோசம் ஆனார்.