விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டியில் 40 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடினர். விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் ராஜபாளையம் நகர கைப்பந்து கழகம் சார்பில் 5 ஆவது தமிழ்நாடு மாநில கல்லூரிகளுக்கான கைப்பந்து போட்டியை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், விளையாட்டு வீரர் சுரேந்திரன் உள்ளிட்டோர் துவங்கி வைத்தனர். 4 நாட்கள் நடைபெறும் போட்டி நடைபெற உள்ள நிலையில் முதல் நாள் போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.