ஈரோட்டில் கடந்த 19 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற விசிகவினர் ஹெல்மெட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மாவட்ட செயலாளர் சாதிக் ஹெல்மெட்டும் அணியாமல், செல்போனில் பேசிக் கொண்டே பைக்கில் சென்ற நிலையில், அதனை அவரே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.