விசிக தர்ணா (VCK Protest) : கரூரில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தோகைமலை, நங்கவரம், கடவூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, விசிக மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 5 பேர் மட்டுமே உள்ளே செல்லுமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் கிருதலாபுரம் கிராம மக்கள் பட்டா வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..!