மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொண்ட விசிகவினர், காமாட்சி அம்மன் கோவில் வீதியில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வீடு வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது, அவர்கள் விசிக கொடியை வைத்து கொண்டு நடனமாடியதற்கு, அங்கிருந்த பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.